×

இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?

பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லாத நிலையில், உதாரணமாக, பிறக்கும்போது ஒருவருடைய ஜாதகத்தில் 10ம் இடத்தில் செவ்வாய் என்று வைத்துக் கொண்டால், அதை நாம் செவ்வாய் தோஷமாக எடுத்துக்கொள்வது இல்லை. அதுவே அவர்களுடைய வயதின் லக்னமாக ALP முறையில் 20 முதல் 30 வயது காலகட்டத்தில், மூன்றாவது லக்னம் இயங்கும்போது, செவ்வாய் 8ம் இடத்தில் நின்று, கடுமையான செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அவர்களுக்கு செவ்வாய் தசையும் நடப்பில் இருக்குமானால், அதீத பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு செவ்வாய் தோஷம் கடுமையான காலகட்டத்தில், அவர்கள் சுத்த ஜாதகம் என்ற நினைத்து பொருத்தம் பார்க்கும் போது, அவர்களுக்கு திருமணத் தடை ஏற்படுகிறது.இந்த ஜாதகருக்கு ஜென்ம லக்னம் மேஷலக்னம். செவ்வாய் மகர வீட்டில் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடத்தில் அமர்ந்து உள்ளார். இப்பொழுது இந்த ஜாதகருக்கு பிறப்பு லக்ன அடிப்படையில் தோஷம் இல்லை. இவருடைய ராசி கன்னியா ராசி சந்திரனை அடிப்படையாகக் கொண்டுகூட இவருக்கு தோஷம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாரம்பரிய முறையில் லக்னத்திற்கு அல்லது ராசிக்கு 1,2,4,7,,8,12ல் செவ்வாய் இருந்தால், தோஷம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இங்கு ALP லக்னம் கடக லக்னமாக வரும் பொழுது, மகர வீட்டில் உள்ள செவ்வாய் கடக லக்னத்திற்கு 7ம் இடத்தில் உள்ளார்.

அதனால் செவ்வாய் தோஷம் என்ற அடிப்படையில் இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஏற்பட காரணமாக இருந்தது. ALP லக்னம் ஆயில்ய நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் திருமணம் ஆகி, ஆயில்ய நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரிவினை ஏற்பட்டு, அது மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் முற்றுப்பெற்றுவிட்டது. இப்பொழுது ஜாதகர், ALP லக்னம் பூரம் நட்சத்திரத்தில் சென்று கொண்டுள்ளது, இப்பொழுது மறுமணம் பற்றி பேசிக் கொண்டுள்ளார்.ALP லக்னத்திற்கு 2ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், அதீதமான வருமானம், அதீதமான படிப்பு, எதிர்பார்ப்புகளும் குடும்பத்தில் உள்ளவர்களின் அதீதமான எதிர்பார்ப்புகளும் திருமண தடைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எடுத்தெறிந்து பேசும் குணம் மிக்கவர் களாகவும், சகிப்புத்தன்மை குறைவாகவும் இருக்கும். தான் சொல்வது மட்டுமே சரி என்ற எண்ணமும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். விட்டுக் கொடுத்து செல்லும் குணம் இவர்களிடம் குறைவு என்பதால், குடும்பத்திற்குள் குழப்பங்களும் பிரச்னைகளும் அதிகரிக்கும். தன் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பதால், கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் அதிகரிக்கும்.

ALP லக்னத்திற்கு 4ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், தன்னுடைய மகளுக்கோ, மகனுக்கோ, பொருத்தமாக வரன்களை தேடுவதாக கூறிக்கொண்டு, மிகப் பெரிய எதிர்ப்புகளோடு, ஜாதகரின் தாயே தடையாக மாறுவார். ஜாதகர், வீடு கட்டியவுடன், வேலை கிடைத்தவுடன், திருமணம் செய்துகொள்வேன் என்பதாலும் அல்லது ஜாதகருக்கு பெரிய வீடாக அமையப்பெற்றால், அதே மாதிரியான எதிர்பார்ப்புகளோடு, திருமணத்தை தடையாக்குவார். சில அற்ப சுகங்களால், ஜாதகரது திருமண வாழ்க்கை தள்ளிப் போகும். அல்லது எதிர்பாலினத்தவரின் பொருத்தமான வேலை அல்லது தொழில் சார்ந்த எதிர்பார்ப்புகளால் திருமணத்தடை, தாமதம் ஏற்படும்.
(வளரும்)

The post இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? appeared first on Dinakaran.

Tags : Mars ,
× RELATED உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை